மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோஅனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து ஜூன் ஜூலை மாதங் களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Categories