நீர்நிலைகளில் மாமிசக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நகராட்சி தலைவர் பேசினார். அவர் இறைச்சி கடை கழிவுகளை வாங்குவதற்காக தினசரி ஒருவர் வருவார்.
அவரிடம் ரூபாய் 60 பணம் கொடுத்து கழிவுகளை கொடுக்க வேண்டும். இதை மீறி நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் மாமிசக் கழிவுகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரித்தார்.