நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் ஏரளமான நீர்நிலைகள் உள்ளது. இந்த பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர். இந்தப் பகுதிகளில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் நீரோடைகளில் இருக்கும் நிலங்கள் வருவாய் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வருகிறது.
அதாவது நீர் நிலைகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரைவீரன் காலனி, பிங்கர் போஸ்ட், ஆடோ சாலை, குன்னூர் தாலுகா பிக்கட் போன்ற பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இங்கு மொத்தமாக 38 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.