நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி நீலகிரி மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டட்டி கிராமத்தில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்திருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பை வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், பாபு மற்றும் பழனிச்சாமி உள்பட சில அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினர். இங்கு மொத்தம் 10 சென்ட் இடம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராப்ராய் கிராமத்திலுள்ள ஓடையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை கிராம நிர்வாக அலுவலர்கள் சபீர் கான், மோகன்குமார், கிராம உதவியாளர் அறிவாகரன் உள்ளிட்டோர் அகற்றினார். இந்தப் பகுதியில் மொத்தம் 10 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. இதேப்போன்று நடுஹட்டி கிராமத்திலும் 10 சென்ட் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.