Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீர்நிலைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு…. “வேறு இடத்தில் பட்டா கொடுங்க”…. கலெக்டர் அறிவுறுத்தல்…!!

நீர்நிலைப் பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்தார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் உதவி கலெக்டர்கள் வேலூர் பூங்கொடி, குடியாத்தம் தனஞ்செயன் மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர்.

அப்போது கலெக்டர் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் இருளர், நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆதார் அட்டை, மின்சாரம், ரேஷன் கார்டு உட்பட பல அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என்றார். மேலும் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விட்டு அதில் வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

நீர்நிலைப் பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா போட்டு கொடுக்க வேண்டும். மேலும் பிரதமரின் “அவாஸ் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கோரி ஒவ்வொரு தாலுகாவிலும் 50-க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அவர்களின் பெயர், முகவரி, வருட வருமானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரி பார்த்து தகுதியான நபர்களுக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |