தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதோடு, தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அறிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து பாதுகாப்பு உடைய அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
Categories