தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல்களை அமைக்க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம்.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும் நீர் மோர் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். இப்பணிகளை மேற்கொள்ளும்போது கொரோணா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.