தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சியினர் மக்களை கவரும் வண்ணம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் தனியாக உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.