Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீர் இறைக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி”… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

நீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்தை வீதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவரின் மனைவி கோமதி. கோமதி இன்று காலை தனது வீட்டில் இருக்கும் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி விழுந்துள்ளார்.

இதனால் இவர் சத்தம் போட்டு கத்தியதை அடுத்து மகன்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி ரேவதியை உயிருடன் வெளியே மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

Categories

Tech |