Categories
மாநில செய்திகள்

நீர் நிலைகளை துல்லியமாக கணக்கெடுக்க… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு சிறப்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதை தொடர்ந்து அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அழகுபடுத்த இயற்கை நீரோட்டத்திற்கு இடையூறாக எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ளம் ஓடை கால்வாயில் கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |