சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் போன்றோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலமாக மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட் தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் இருக்கின்ற வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.