Categories
மாநில செய்திகள்

நீலகிரியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த ஆட்சியர் பரிந்துரை

 தேர்தல் நடத்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அனைத்து கட்சியினருடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் சார்பாக 10க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது அரசு அதிகாரிகளிடை ஏமாற்றம் அடையச் செய்தது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் க்கான பட முடிவு
இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ஊராட்சி பகுதிகளில் 1,100 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரிக்கபட்டுள்ளதாகவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் இரண்டாக பிரிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் பணிக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |