அரியவகை பறவைகளை பாதுகாக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கு அரியவகை பறவைகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு அயல்நாடுகளில் இருந்தும் பறவைகள் வரும். இவை இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்த பகுதியில் பிளாக் டிராங்கோ என்ற அரியவகை பறவை பூக்களில் இருந்து தேனை உட்கொள்ளாமல் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேனை உட்கொள்ளும். இந்தப் பறவை தன்னைவிட பெரிய பறவைகளுடனும் எதிர்த்து நிற்கும் குணமுடையது. இதனையடுத்து இருவாட்சி பறவை மனிதர்களின் வாழ்வியலோடு ஒத்துப்போகும் பறவையாகும்.
இதில் பெண் இருவாட்சி பறவை முட்டைகளை அடைகாப்பதற்கு முன்பாக தனது இறக்கைகளை கலைந்துவிடும். அதன்பிறகு தனது முட்டைகளை அடைகாப்பதற்காக மண்ணாலான கூட்டினை செய்யும். அந்த கூட்டில் ஒரு சிறிய துளையை போட்டுவிட்டு பெண் இருவாட்சி பறவையும் அந்த கூட்டில் இருக்கும். இதில் ஆண் இருவாட்சி பறவை வெளியே சென்று உணவு தேடி செல்லும். அந்த இரையை பெண் இருவாட்சி பறவைக்கும் குஞ்சிகளுக்கும் கொடுக்கும். ஒரு வேளை ஆண் இருவாட்சி பறவை கூட்டிற்குள் வராவிட்டாலும் இறந்துவிட்டாலோ இருவாட்சி பறவை கூட்டை விட்டு வெளியே சென்று இறை தேடாது.
அதற்குப் பதிலாக இருவாட்சி பறவை தனது குஞ்சுகளுடன் கூட்டிற்குள்ளேயே இறந்து விடும். இதன்பிறகு வெல்வெட் பிராண்டட் நுதாட்ச் பறவைகள் நீண்ட அலகுகள் கொண்டவையாக இருக்கும். இந்தப் பறவைகள் 360 டிகிரி கோணத்தில் அதிவேகத்தில் நடந்து செல்லும் திறன் கொண்டவை. இதேப்போன்று 182 வகையான அரியவகை பறவைகளை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளைவனத்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்க்கும் வகையில் அதிகாரிகள் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் அரியவகை பறவைகளை பாதுகாக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.