Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் விவசாயிகளின் புதிய முயற்சி…. விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கிணறுகள்….!!!!

தமிழகத்தில் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பிளாஸ்டிக் கிணறுகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர். தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை மாவட்டத்தில் பெரும்பாலான காய்கறி தோட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாததால் மழையை நம்பியே விவசாயம் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளார்கள்.எனவே தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளில் கிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவற்றிற்காக விவசாய நிலங்களின் நடுவே பெரிய கிணறு அமைக்கப்பட்டு அதில் தேக்கி வைக்கப்படும். தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடாமல் இருக்கவும், கிணறு வற்றி விடாமல் இருக்கவும், தற்போது கிணற்றில் ராட்சச பிளாஸ்டிக் பைகளை கொண்டு கிணறு அமைக்கப்படுகின்றன.

இதனால் வெகு நாட்கள் தண்ணீர் வீணாகாமல் கிணற்றில் இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் கிணறு அமைப்பதன் மூலமாக தண்ணீர் வீணாகாமல் இருப்பதனால் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் இது போன்ற பிளாஸ்டிக் கிணறுகளை அமைத்து வருகின்றனர்.

Categories

Tech |