வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ பாஸ் கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி கிடைத்ததும் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.