Categories
மாநில செய்திகள்

நீலகிரி மலை ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?…. ஆர்வத்துடன் போகும் சுற்றுலா பயணிகள்…..!!!!!

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் உதக மண்டலம் வரை போகும் மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றது ஆகும். ஊட்டி மலை ரயிலை போன்றே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனினும் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில், தனித்துவமிக்க ரேக் மற்றும் பினியன்அமைப்புடைய நாட்டில் முதல் மலைரயில் ஆகும் என தென்னக ரயில்வேயானது பெருமையுடன்  டுவிட்டர் பதிவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை செங்குத்தான சாய்வுகளை கடக்க இந்த பொறிமுறை உதவுகிறது. ரேக், பினியன் ஆகிய பொறிமுறையானது, கல்லார் என்ற இடத்துக்குப் பின் தொடங்கி குன்னூர் ரயில்நிலையம் வரை பயன்படுத்தப்படுகிறது.

ரேக் மற்றும் பினியன் ஸ்டீயரிங் பொறிமுறை வாயிலாக சக்கரங்களைத் திருப்புவது எளிது ஆகும். ஸ்டீயரிங் வீலின் வட்ட இயக்கத்தை சக்கரங்களைத் திருப்புவதற்குத் தேவையான நேரியல் இயக்கமாக மாற்றுவதற்கு ஒருகியர்-செட் இந்த பொறி முறையில் பயன்படுத்தப்படுகிறது. இது கியர் குறைப்பையும் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே சக்கரங்களைத் திருப்புவது எளிது ஆகும். மலைகளிலுள்ள பாறைகள், மேடுபள்ளங்கள், வளைவுகள், சீரற்ற பரப்பு என பல வகையான இயற்கை வழித்தடங்களில் செம்மையாக உருவாக்கப்பட்டிருக்கும் இருப்புப் பாதையில் இந்த சிறப்பு ரயில் இயங்குகிறது. ஆகையால் இதற்கு மேம்பட்ட மற்றும் வித்தியாசமான இயக்கப் பொறிமுறை தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளத்தை கொள்ளைகொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கோள்கின்றனர். நீலகரி மலையில் இந்த ரயிலில் பயணிக்கும் போது இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். பின் அங்கு இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5:35-க்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது.

கோடை காலத்தில் நீலகிரி மலையில் உள்ள பல சுற்றுலாத்தளங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களிக்கின்றனர். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூபாய்.1,210, 2ஆம் வகுப்பு ரூபாய்.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூபாய்.1,575, 2ம் வகுப்பு ரூபாய்.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக இந்த மலைரயில் இருக்கிறது. பல சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலைரயில் திகழ்கிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் என இந்த ரயிலில் அனைத்துமே மிகசிறப்பாகவும், தனித்துவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |