நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி. அம்ரித்தை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.. நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யபட்டுள்ள அம்ரித் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.