அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை. ஏனெனில் பிறந்த குழந்தைக்குகூட ஆதார்கார்டு வழங்கப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால்ஆதார் என அழைக்கப்படுகிறது. வழக்கம்போல் ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ, அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுமையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதை பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களை இணைக்கவேண்டும். இவற்றில் இருப்பிடச்சான்று(பிஓ), உறவுச்சான்று (பிஓஆர்) மற்றும் பிறந்ததேதி ஆவணம் (டிஓபி ) ஆகிய ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும். அதே நேரம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை நீலநிறத்தில் வழங்கப்படுகிறது.
பால் ஆதார் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.
# 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீலம் நிற ஆதாரானது வழங்கபடுகிறது. இதற்கிடையில் குழந்தைக்கு 5 வயதாகும் நிலையில் இந்த அட்டை செல்லாது.
# குழந்தையின் பள்ளி ஐடியை ஆதார் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
# குழந்தை 5 வயதாக இருக்கும் போது ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட பயோமெட்ரிக் டேட்டாவை மீண்டுமாக குழந்தையின் 15 வயதில் அப்டேட் மறக்காமல் செய்யவும்.
# குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் (அ) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சான்று ஏதேனும் ஒன்றை வைத்து குழந்தைக்கான ஆதார் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
# குழந்தைகளுக்கான ஆதாரில் அவர்களின் கை ரேகைகள் மற்றும் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது. இதன் காரணமாக குழந்தை 5 வயதைத் தாண்டியதும் அவர்களின் பயோமெட்ரிக் டேட்டாக்களை அப்டேட் செய்யப்படவும்.