இந்தியா ஆறு தங்கம், ஏழு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன. ஏழாவது நாளில் நேற்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் முரளி 8 புள்ளி 08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற முரளி சங்கருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா ஆறு தங்கம், ஏழு வெள்ளி, ஏழு வெண்கலம் என்று 20 பதக்கங்களை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.