Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீள காற்றாலை விசிறியின் றெக்கையை ஏற்றி சென்ற லாரி…. 1 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

சேலம் மாவட்டத்திலிருந்து 320 அடி நீள காற்றாலை விசிறியின் றெக்கை லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சேலம் to கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் லாரி வளைந்துசெல்ல வேண்டி இருந்தது. ஆனால் அந்த இடத்தில் லாரி திரும்பமுடியாமல் நின்றது.

இதன் காரணமாக அங்கு பேருந்து , லாரி உட்பட பல வாகனங்கள் நீண்டவரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக காத்திருந்தது. இதேபோன்று தவிட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை பெரும்பாலான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அதனை தொடர்ந்து அந்த லாரி மிகவும் மெதுவாக அங்கிருந்து சென்றது. அதன்பின் மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |