கணவன் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வி.என். பாளையம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சேகருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சேகருக்கும் கவுசல்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் சவுசல்யா சேகரிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் கவுசல்யா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த கவுசல்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.