Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ ஆசப்பட்டத நான் நிறைவேத்துவேன்’… மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள்… புகழின் உருக்கமான பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

https://twitter.com/Pugazh_VijayTv/status/1394890807530774528

இந்நிலையில் இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள் என்பதால் அவருடன் நடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘ஹேப்பி பர்த்டே மாமா. எப்பவும் நீ என் கூட தான் இருப்ப. மக்களை என்னைக்கும் சந்தோசமா வைக்கணும்னு நீ ஆசப்பட்டத நான் நிறைவேத்துவேன் மாமா மிஸ் யூ’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். புகழின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |