Categories
உலக செய்திகள்

நீ எங்கேருந்து வந்த…? அழையா விருந்தாளியை பார்த்து உற்சாகமடைந்த ராணி…!!!

இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், தன் நினைவு சின்னங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, அழைக்காமல் வந்த தன் நாயை பார்த்து உற்சாகமடைந்துள்ளார். 

இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், அரியணையில் அமர்ந்து கடந்த 6ஆம் தேதியோடு, 70 வருடங்கள் முடிந்தது. எனவே, தன் 70 வருட கால ஆட்சியை நினைவு கூறும் விதத்தில் இருக்கும் முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பியிருக்கும் அட்டைகள், மக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் போன்றவை இருந்தது.

அப்போது, அவர் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய் அவர் அருகில் வந்தது. அந்த நாயின் பெயர் கேண்டி. கேண்டி வந்தவுடன் உற்சாகமான ராணி, நீ இப்போ எங்கே இருந்து வந்த?  உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும், என்று கூறி ஆசையாக வரவேற்றுள்ளார்.

Categories

Tech |