Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு இங்க நிக்க?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர்  பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பதும், அவ்வழியாக வேலை முடித்துவிட்டு வரும் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜபாண்டியை  கைது செய்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது 8 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |