பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் அரிசி வியாபாரம் செய்வதற்கு அரிசி வாங்கி தருமாறு கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வீரசாமி , தனது மகன் விக்னேஷ் மற்றும் சீனு ஆகியோருடன் சேர்ந்து தனலட்சுமி தாயான ஆண்டாள் என்பவரை கொலை செய்து சுடுகாட்டில் புதைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீரசாமி, விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த சீனுவையும் கைது செய்துள்ளனர்.