வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் கெட்டது செய்தால் நல்லது கெட்டது தான் நடக்கும் என்பது இந்த பழமொழியின் அர்த்தம். இதற்கு எடுத்துக்காட்டாக தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் மிகவும் வயதான மரம் ஒன்றினை நபர் ஒருவர் தன் காலால் எட்டி உதைக்கிறார்.
இதையடுத்து அந்த மரம் அந்த நபரின் தலையிலேயே உடைந்து விழுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நாம் என்ன செய்கிறோமோ அதற்கான பலன் நமக்கு உடனே கிடைக்கும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நம்முடைய வாழ்க்கை நம்முடைய கையில் தான் இருக்கிறது. நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது நமக்கு அதே நன்மை திருப்பி கிடைக்கும். தீயவை செய்தால் அதே தீயவை நம்மை வந்து சேரும் என்பதை புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
All that you do comes back to you – Good and Bad https://t.co/kMHZGF3NLi
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) July 1, 2021