காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சித்தால் சீமான் வீட்டிற்க்கே வருவோம் என காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், நான் சீமானிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன் நீ யாரை கடிக்கவில்லை, யாரை குதறவில்லை. விளிம்புநிலை சமூகத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித் உருவாக்கி வந்தார் என்றால் அவரை கடித்து குதறுவ, ஒரு பொதுவுடமை இயக்கத்தின் அறிவுஜீவியான பேராசிரியர் அருணனை கடித்து குதறுவார்,தமிழறிவு மணியனை கடித்து குதறுவ. நீ யாரை விட்டு வைக்கிற ? இது என்ன பழக்கம், உன்னுடைய கருவியை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
நீ என்ன அரசியல் பண்ணுகின்ற,உன்னை தவிர வேற யாரும் இருக்கக்கூடாதா நாட்டில் ? நீ என்ன பெரிய அதிபரா, ஹிட்லரா, முசோலினியா.தமிழகத்தில் இதுபோன்ற குரல்கள் பல ஒலித்துள்ளது. மைக் முன்னால் கத்தி கத்தி மைக்கிற்கு காய்ச்சல் வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு கவுந்தடித்து படுத்து கொண்டு இருக்கிறார்கள். இதான் தமிழகத்தினுடைய வரலாறு. ஆகவே சீமானுக்கு என்ன சொல்கிறேன் என்றால் காங்கிரஸ் பேரியக்கத்தையும், எங்களுடைய குடும்பமான இந்திரா காந்தி குடும்பத்தை இப்படி தரம் தாழ்ந்த வார்த்தைகேப்லயில் விமர்சிக்க வேண்டாம்.
கோடானுகோடி குடும்பத்தை உள்வாங்கிய குடும்பம் அது. குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் புரட்சியாளர் அம்பேத்கருக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவி இந்திராகாந்தி அவர்கள். அவர்கள் குடும்பத்தையோ, அவர்களையோ இனிமேல் குறையோ, குற்றமோ, இந்த நக்கல் அடிக்கின்ற செயல்களெல்லாம் இருந்தால் நேராக புறப்பட்டு உன் வீட்டிற்கு வருவோம். உன் வீட்டிற்கு வெளியே வந்து நிற்போம். இது தான் முதலும் கடைசியும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வரம்பு இருக்கிறது பேசுவதற்கு ? என்ன அரசியல் செய்கிறீர்கள் நீங்கள் ? நாங்கள் கூட ஆர்.எஸ்.எஸ்-ஐ கடுமையாக எதிர்க்கிறோம். கொள்கை ரீதியாக எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ பிடிக்காது, சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-ஐ கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால் கொச்சைப்படுத்திப் பேச மாட்டோம். பிஜேபியை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது இந்த நாட்டில் என்கிறோம், கொச்சைப்படுத்தி பேசுவது கிடையாது. நாங்கள் சொல்கின்ற கருத்தை நாகரீகமாக சொல்கிறோம், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக கூறுகிறோம் என தெரிவித்தார்.