Categories
தேசிய செய்திகள்

“நீ என் மகளை காதலிக்க கூடாது”…. ஆத்திரத்தில் காதலியின் கண் முன்னே… காதலன் செய்த வெறிச்செயல்…!!!

தன் மகளை காதலிக்க கூடாது என்று காதலியின் தந்தை கண்டித்ததால் வாலிபர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா என்ற பகுதியில் வசித்து வருபவர் நாகப்பா. அதே பகுதியில் வசித்துவரும் நரேஷ் என்பவர் மெஸ்காம் வளாகத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், நரேஷ்க்கும், நாகப்பாவுக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இருப்பினும் நரேசும், நாகப்பாவின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் நாகப்பாவுக்கு தெரிய வரவே தனது மகளை காதலிக்கக் கூடாது என்று நரேசை வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை தனது மகளுடன் பட்டணத்தில் ஏரிக்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நரேஷ் இரும்பு கம்பியால் நாகப்பாவை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த நாகப்பா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நாகப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நிறை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |