சேரன் டுவிட்டரில் லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் லாஸ்லியாவும், சேரனும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் பாசம் வைத்திருந்தனர். சேரன் லாஸ்லியாவை தனது மகள் போல கவனித்து கொண்டார். லாஸ்லியாவும் சேரனை பார்க்கும் போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இதனால் சேரன் ட்விட்டரில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். உனது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை . உன் தந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாய் என்பது எனக்கு தெரியும். இந்தத் துயரச் செய்தி என்னையே உலுக்குகிறது நீ எப்படி தாங்குவாய் மகளே. உன் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.