ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், ஸ்டாலின் திமுக கூட்டத்துல பேசிட்டு இருக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு இருக்காரு. அவர் எண்ணத்தை கிழிச்சாரு அப்படின்னு சொல்றாரு. நாம எதோ கிழிச்சோமா… நாங்க கிழிச்சத தான்பா சொல்லிட்டு இருக்கிறோம்.
நாங்க என்ன என்ன செஞ்சேம்னு தான் சொல்லிட்டு இருக்குறோம். நீ ஏன் கோவபடுற ? நீ செஞ்சிருந்தா சொல்லு… நீ செய்யல, சொல்லுறதுக்கு வழி இல்ல. ஆனால் நாங்கள் செய்திருக்கிறோம், அந்த செஞ்ச செய்தியை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்த்துக் கொண்டு இருக்கிறோம். எல்லா இடத்துக்கும் போய் அவதூறு பிரச்சாரம். இந்த ஆட்சியில் ஒண்ணுமே நடக்கவில்லை என்று தவறான செய்தியை மக்களிடத்திலே கொண்டுபோய் பேசிட்டு இருக்கிறார்.
அதை முறியடிப்பதுற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு 2011இல் இருந்து இதயம் புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருக்கின்றபோது என்னென்ன திட்டங்கள் செய்தார்கள்? அதற்கு பிறகு அம்மா மறைவுக்கு பிறகு அம்மாவுடைய அரசு இந்த 4ஆண்டு காலத்திலேயே என்ன திட்டங்கள் செய்தது அதையெல்லாம் நாங்கள் பத்திரிக்கையின் வாயிலாக மக்களுக்கு இன்னைக்கி கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.
அதுல உங்களுக்கு என்ன சங்கடம் ? தவறு இருந்தா சொல்லு ? அதுக்கு நாங்க பதில் சொல்ல தயாராக இருக்கின்றோம். அதில் தவறு கண்டுபிடிப்பதற்கு வழியே இல்லை. அதெல்லாம் உண்மை செய்தி. உண்மை செய்தி வருகின்ற காரணத்தினால் ஸ்டாலின் எரிச்சல் அடைகிறார்.இவ்வளவு செஞ்சிருக்காங்களா ? அப்படின்னு மலைச்சு போய் நிக்குறாரு. அவர் சட்டமன்றத்துக்கு வருவதில்லை, நாட்டு மக்களையும் பார்ப்பதில்லை.
நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வது இல்லை. அதனால் தான் அதை பார்த்து பயப்படுகின்றார். .எவ்வளவு செய்து இருக்கிறார்களா ? அப்படின்னு அவரே ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சாதனை படைத்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு என தமிழக முதல்வர் பெருமிதம் கொண்டார்.