Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ ஒரு ட்ரூ வாரியர்’… உனக்கு இந்த எவிக்சன் நடந்திருக்கக் கூடாது… சனம் செட்டிக்கு ஆதரவு தெரிவித்த ஆரி…!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேறி குறித்து ‘இது உனக்கான எவிக்ஷன் அல்ல’ என ஆரி கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று சனம் ஷெட்டி வெளியேறியுள்ளார்.

ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் சனம் செட்டி வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் கமல்ஹாசன் முன்னிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் சனம்  உரையாடினார். அப்போது சனத்திடம் பேசிய ஆரி  ‘நீ ஒரு ட்ரு வாரியர் , இந்த எவிக்சன் உனக்கு நடந்திருக்கக் கூடாது’ என வெளிப்படையாக கூறினார் . இதையடுத்து சனம் மக்களின் தீர்ப்பை மதிப்போம் என பதிலளித்து விட்டு வெளியேறினார்.

Categories

Tech |