Categories
தேசிய செய்திகள்

நீ கருப்பா இருக்க!… கடுப்பான மனைவி…. கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

சத்தீஷ்கரின் துர்க் மாவட்டத்தில் அம்லேஷ்வர் கிராமத்தில் ஆனந்த் சோன்வானி (40) வசித்து வந்தார். இவருக்கு சங்கீதா சோன்வானி(30) என்ற மனைவி இருந்தார். கருப்பு நிறத்துடன் காணப்பட்ட மனைவியை தொடர்ந்து, அழகாக இல்லை எனக்கூறி கணவர் ஆனந்த் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக ஒருக்கட்டத்தில் கோபமடைந்த மனைவி கோடாரியால் அவரது கணவரை வெட்டி கொன்றுள்ளார். மேலும் கணவரின் மர்மஉறுப்பை அறுத்திருக்கிறார்.

இருப்பினும் அடுத்தநாள் யாரோ சிலர் தன் கணவரை கொன்றுவிட்டனர் என கிராம வாசிகளிடம் தவறான தகவலை கூறியுள்ளார். இந்நிலையில் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் ஆனந்தின் மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் மனைவி இறந்தபிறகு, சங்கீதாவை 2-வது திருமணம் செய்துள்ளார் ஆனந்த். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |