Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ கலக்கு பேபி’… விஜய் சேதுபதியின் ‘மாஸ்டர் செப்’… புதிய புரோமோ…!!!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் நடிகை தமன்னா விஜய் சேதுபதியிடம் ‘ஆர் யூ ஓகே பேபி’ எனக் கேட்கிறார் . இதற்கு விஜய் சேதுபதி ‘கொஞ்சம் டென்ஷனாக தான் இருக்கு பேபி’ என்கிறார். இதன்பின் ‘நீ கலக்கு பேபி’ என தமன்னா கூறுவதுடன் புரோமோ நிறைவடைகிறது. மேலும் அதில் இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்டு 7-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |