Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ கள்ளக்காதலை கைவிடு…. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புகழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி பழனிசாமி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலின் மனைவி புகழரசியிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் புகழரசிக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்துள்ளது.

இதனால் சக்திவேல் கள்ளக்காதலை கைவிடுமாறு புகழரசியிடம் பலமுறை கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புகழரசி சக்திவேலை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடந்த 13-ஆம் தேதி 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சக்திவேல் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் சக்திவேலுக்கு தோட்டத்திற்கு பயன்படுத்தும் விஷத்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் புகழரசி, அவரது கள்ளக்காதலன் முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |