செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது.
அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க இருந்த அக்னி குண்டத்தை எடுவிட்டு லட்சுமி படத்தைஎப்படி வைக்க முடியும். நியாயமாக வைக்கணும் என்றால் ஜேசு கிருஸ்து படம் வைக்க வேண்டும். ஏனென்றால் அந்தோணிசாமி கிறிஸ்தவர் தானே, என்னைப் பொறுத்தவரை நான் முதலிலேயே சொல்லியிருக்கேன்….
எந்த படமும் வைக்காமல் இருந்திருந்தால் நல்லது, படம் வைக்க வேண்டும் என்றால், இல்ல சமூக நீதிக்காக என்று நீங்க சொன்னீங்க என்றால் ஈ.வே.ரா படம் வைங்க, எதுக்கு லட்சுமி படம் வைக்கணும், அந்த அக்னி குண்டத்தை எடுத்தாச்சு, சமூகநீதிக்கு என்று சொல்கிறீர்கள், சமூகநீதிக்கு பெரிய மொத்த குத்தகைக்காரர் யாரு ஈ.வே.ரா தானே… அவர் படம் வைங்க யாரை ஏமாற்றுகிறீர்கள்? இது கலவர புத்தியோடு எடுக்கப்பட்ட படம். அந்தோணி பெயர் மாற்றினது தப்பு, குருமூர்த்தி என்று பெயர் வைத்து தப்பு.
ஹிந்து அடையாளங்களை வைத்தது தப்பு, மகாலட்சுமி படம் வைத்ததை எடுக்கணும் என்று கேட்கிறேன் நான், இல்லை என்றால் இந்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும். எல்லா ஹிந்துக்கள் இடமும்…. கிறிஸ்டியன் மிஷினேரியின் கைக்கூலியாக இந்த இரண்டு பேர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் காரணம், வேறு என்ன காரணமாக இருக்க போகின்றது ? ஏன் அந்தோணிசாமி பெயர் எடுத்தது. அந்தோணிசாமி கிறிஸ்துவர் என விமர்சித்தார்.