இலங்கை, இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. போட்டிகள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும். டி 20 போட்டிகள் 24, 26 ,27 ஆகிய தேதிகளில் லக்னோ, தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மார்ச் 4-8 (மொகாலி) மார்ச்12-16 (பெங்களூர்) ஆகிய தேதிகளில் நடைபெறும். அதிலும் குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த டி 20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான விருத்திமான் சஹா பெயர் இடம்பெறவில்லை. ரிஷப பந்திற்கு ஓய்வு வழங்கப்பட்டும் இவரது பெயர் இடம் பெறாமல் இருப்பது தான் பெரிய அளவில் காணப்படுகிறது. கடந்த ஆண்டு ரிஷப் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒய்வில் சென்றதால் தான் விருத்திமான் சஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றார். இருப்பினும் XI அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ அவரை ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க அறிவுறுத்திய நிலையில் பங்கேற்காமல் இருந்ததால்தான் புறக்கணிக்க பட்டுள்ளார் என காரணம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த சாஹா சில பரபரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளார்,. அதில்” நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 60 ரன்கள் சேர்த்த போது கங்குலி தனக்கு வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார் அதில் நான் பிசிசிஐ இருக்கும் வரை நீங்கள் இந்த அணியில் இருப்பீர்கள் என தெரிவித்திருந்தார். அவரது மெசேஜ் எனக்கு தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்தது, அதனை தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்தேன்” என கூறியுள்ளார். ஆனால் தேர்வு குழு ஒரு முறை என்னை அழைத்து இனிமேல் உங்கள் பெயரை பரிசீலிக்க மாட்டோம் என வெளிப்படையாக தெரிவித்தது. ஆனால் அணியின் ஒரு அங்கமாக இத்தனை நாள் இருந்ததால் இதனை வெளிப்படையாக நான் கூறவில்லை. மேலும் ராகுல் திராவிட் கூட என்னை ஓய்வு பெற சொன்னார் என கூறியுள்ளார்.