Categories
அரசியல்

“நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு”… அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…!!!!

இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் ஆகஸ்ட் 15. இன்றுடன் இந்தியா சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 1700 காலங்களில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையன் இந்தியாவை அடிமையாக்கி இந்தியாவை பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ததை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்கள் இவ்வளவுதான் என்று கூறவே முடியாது. அவ்வளவு அநியாயங்களை நம் இந்தியர்களுக்கு அவர்கள் செய்துள்ளனர்.

இதனால் வெகுண்டெழுந்த பலர் வெள்ளையர்களை எதிர்க்கத் துணிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கையாண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போராடி 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றனர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மிக பிரமாண்டமாக தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இன்றைய தினத்தில் நாம் நமது இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து சுதந்திரதினத்தை போற்றி வணங்க வேண்டும்.

சுதந்திர தினம் பற்றிய ஒரு கவிதை;

துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
திக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?

சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?

உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Categories

Tech |