அரியானா மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த பத்தாம் தேதி பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், கடந்த சில நாட்களாக எனது மகன் பயின்று வந்த பள்ளியின் முதல்வர் படிப்பதற்கு லக்கி இல்லை என்று மகனைக் கூறி திட்டியதாகவும்,அது மட்டுமல்லாமல் மகனை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் அதைத் தாங்க முடியாமல் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் சக மாணவர்கள் மூலம் இதை அறிந்ததாகவும் பெற்றோர்கள் புகாரில் குறிப்பிட்ட உள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பள்ளி முதல்வர் திட்டியதால் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.