Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ யாருடன் பேசினாய்….? மாணவியை தாக்கிய காதலன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். கடந்த 12-ஆம் தேதி மதுபோதையில் கவின்குமார் வீட்டில் தனியாக இருக்கும் மாணவியை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கவின்குமார் மாணவியிடம் நீண்ட நேரமாக செல்போனில் தொடர்பு கொண்டேன் போன் பிசியாகவே இருக்கிறது. நீ யாருடன் பேசினாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மாணவியை கவின்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டு குளியல் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |