Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ ரொம்ப நல்லா இருக்கணும் கண்ணா”…. தனது தீவிர ரசிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வாய்ஸ் மெசேஜ்….!!!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவ பொம்மையை வடிவமைத்த அவரின் தீவிர ரசிகரை அவர் பாராட்டி பேசிய வாய்ஸ் மெசேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். 70 வயது ஆனாலும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி பிரபல நடிகராக இருந்த போதும் தனக்கான உழைக்கும் ரசிகர்களை மதிக்க தவறியதில்லை. இந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகரின் மகள் ஒருவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதை அறிந்த அவர் வீடியோ கால் மூலம் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

இதனை போல் தனது ஓவியத்தை வரைந்த ஒருவர் மற்றும் க்யூப்ஸில் தனது உருவத்தை உருவாக்கிய ரசிகர் மற்றும் தனக்கு தெரிய வரும் அனைத்து ரசிகர்களையும் நேரடியாக  அழைத்தோ அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டோ தனது  வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் ரஜினி ரஞ்சித், அவர் அச்சு அசல் ரஜினி போன்று இருக்கும் ஒரு உருவபொம்மையை செய்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதுடன் தலைவா உங்களிடம் இருந்து ஒரு வாழ்த்து வீடியோ வேண்டும் என்று அவரது மொபைல் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த ரஜினி அவருக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த வாய்ஸ் மெசேஜில் ரஜினி கூறியதாவது. “வணக்கம் ரஞ்சித் நீங்க செஞ்ச என்னுடைய உருவபொம்மை பார்த்தேன். என்ன கைகள்… நீங்க பெரிய திறமைசாலி.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன் நிச்சயமாக நான் உங்களை ஒரு நாள் சந்திக்கிறேன் நல்லா இரு கண்ணா”.. என கூறியுள்ளார். ரஜினியின் இந்த வாய்ஸ் மெசேஜ் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தலைவா 169 படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். தலைவா 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |