இந்தியாவில் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. நுகர்வோர் நீதிமன்றம் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைந்துள்ளது. நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் புகார்கள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் சம்பவம் நடந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுக்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நுகர்வோர் வாங்கும் பொருளின் விலை மதிப்பு ரூ.1 கோடி வரை இருந்தால் மாவட்ட நுகர்வு மன்றம், ரூ.1- ரூ.10 கோடி என்றால் மாநில நுகர்வு மன்றம் மற்றும் ரூ.10 கோடிக்கு மேல் என்றால் தேசிய நுகர்வு மன்றத்தை அணுக வேண்டும். மேலும் தீர்ப்பு தீர்வாக இல்லையென்றால் 30 நாட்களுக்குள் அப்பபீல் செய்யலாம்.