மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை வடக்கு வளைவு பகுதியில் செல்லகண்ணு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லகண்ணு அப்பகுதியில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்லக்கண்ணு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.