Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நுண்ணுயிர் கூடம் அமைக்க எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

நுண்ணுயிர் கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேநீர் கடைகள், பலகார கடைகள், பழங்கள், பூக்கள், உணவு உள்ளிட்ட ஏராளமான கடைகள் மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள், பலகாரங்கள் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் அதிகமாக குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இவற்றை சுத்தம் செய்வதற்காக பேருந்து நிலைய வளாகத்திலேயே நுண்ணுயிர் கூடம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கான இடத்தை சேலம் பேருந்துகள் நிற்கும் இடங்களின் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு நுண்ணுயிர் கூடம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பள்ளங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த வியாபாரிகள் அங்கு திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை மறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் நடத்தினர்.

அப்போது அவர்கள் பேருந்து நிலையத்தில் நுண்ணுயிர் கூடம் அமைக்ககூடாது என்றும், அந்த இடத்தை வியாபாரிகளுக்கு கடைகளை அமைக்க ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் வியாபாரிகள் போராட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கூடம் அமைப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |