தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி பூண்டில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் விரட்டி அடிக்கும் தன்மை பூண்டிற்கு உள்ளது. அவ்வாறே நுரையீரலை காக்கும் பூண்டு பால் தினமும் குடிப்பது மிகவும் நல்லது. பூண்டு பால் நுரையிரல் அலர்ஜி உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு நிவாரணி. மேலும் உங்களுக்கு திடீரென்று சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலை குடியுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் பாலில் பூண்டை வேகவைத்து அதில் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அது உடலுக்கு மிகவும் நல்லது.