Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்கும் நெல்லிக்காய் சூப்….. இப்படி செஞ்சி குடிச்சி பாருங்க…!!!!

நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

தேவையானவை:

நெல்லிக்காய் சூப் தேவை நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் – 4 கப் கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு.

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Categories

Tech |