நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார். அந்த கார் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் கூறினர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய் நுழைவு வழியாக 40 லட்சம் ரூபாய் வரை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தி இருப்பதாக விதிக்கப்பட்டுள்ளது.
Categories