Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் நகை கடையில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நகை வாங்குவது போல நடித்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூசாஸ்தான்விளை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகைகளை திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. அந்த கடையில் கருணாநிதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாநிதி கடையில் இருந்த போது நகை வாங்க சென்ற 2 வாலிபர்கள் ராசிக்கல் கேட்டுள்ளனர். இதனால் ராசி கல்லை எடுப்பதற்காக கருணாநிதி திரும்பியபோது ஒரு வாலிபர் மேஜை டிராயரை திறந்து அதிலிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாயை திருடி விட்டார்.

இதனை அடுத்து ஒன்றும் தெரியாதது போல வாலிபர்கள் ராசி கல்லை பணம் கொடுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் மேஜை டிராயரில் இருந்த பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |