Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடி…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் மூதாட்டியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பாலக்கரை மெயின் ரோட்டில் இருக்கும் வங்கிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 2 பேர் மூதாட்டியை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தங்களை போலீஸ் என கூறிய இரண்டு பேரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாமா என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். அதன் பிறகு திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி மூதாட்டி அணிந்திருந்த தோடு, தங்க சங்கிலி போன்றவற்றை கழற்றி பத்திரமாக வைக்குமாறு  இருவரும் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய மூதாட்டி சங்கிலி மற்றும் தோடுகளை கழற்றி கொடுத்துள்ளார். இதனை அடுத்து தங்க நகைகளை இருவரும் காகிதத்தில் மடித்து மூதாட்டியிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின் மடித்து வைத்திருந்த காகிதத்தில் பார்த்தபோது தங்க நகை காணாமல் போனதை கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மூதாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |