திருநெல்வேலியில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பேரணி நடத்தியுள்ளார்கள்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் சில பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவிற்காக பேரணி நடத்தியுள்ளார்கள். இதனை சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடக்கி வைத்த நிலையில் இப்பேரணி தாசில்தார் அலுவலகத்திலிருந்து தொடங்கி சில முக்கிய தெருக்களில் சென்று முடிவடைந்தது.