Categories
சினிமா

“நூறு தடவை விழுந்தாலும் மீண்டும் எழுந்து நின்றேன்”…. நிற்பேன்!… அதுவே எனக்குப் பெருமை…. நடிகை சமந்தா பேட்டி….!!!

தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் மனமொத்து பெரிய போவதாக தங்களது இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்நிலையில் நடிகை சமந்தா காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு தான் பனிச்சறுக்கு விளையாடிய அனுபவம் குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா. அதில் அவர் கூறியதாவது, “முதன்முதலில் ஒரு குழந்தை எப்படி விளையாடும் அப்படித்தான் நானும் எனது பனிச்சறுக்கு பயணத்தை தொடங்கினேன். அதனை தொடர்ந்து மெதுவாக விளையாட தொடங்கிய போது நூறு தடவை சறுக்கி விழுந்தேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் எழுந்து முயற்சித்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் இது நமக்கு வேண்டாம் போய் விடலாமா.? என்றுகூட தோன்றியது. ஆனால் நான் அதை செய்யவில்லை விடாமல் முயற்சி செய்தேன் உண்மையிலேயே இது ஒரு நல்ல என்ஜாய்மென்ட். நல்லவேளையாக நான் அதை விடவே இல்லை. இப்போது நினைத்தாலும் மனதில் ஆனந்தத்தை கொடுக்கிறது பனிச்சறுக்கு விளையாட்டு. எல்லா விஷயங்களுமே அப்படித்தான் சைக்கிள் ஓட்ட முதன்முதலில் ஆரம்பிக்கும் பொழுது கீழே விழத்தான் செய்வோம். ஆனால் மீண்டும் எழுந்து சைக்கிளை ஓட்டுவோம் அதேபோல் இந்த பனிச்சறுக்கு விளையாட்டிலும் நான் மீண்டும் மீண்டும் எழுத முயற்சி செய்தேன் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |